டைரக்டர் ராஜமவுலி சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு பெறும் புது பாலிசியை பின்பற்றுகிறார்.
‘நான் ஈ படத்தை இயக்கியவர் ராஜ்மவுலி. தற்போது அனுஷ்கா நடிக்கும் ‘பாஹுபாலி என்ற படத்தை தமிழ், தெலுங்கு இருமொழியில் இயக்கி வருகிறார்.
இப்படம் ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட அரங்குகள், ஏராளமான நடிகர், நடிகைகள், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் என தாம்தூம் செய்து ஷூட்டிங் நடக்கிறது.
தற்போது 200வது நாளாக ஷூட்டிங் தொடர்கிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்துக்கு ராஜமவுலி சம்பளம் வாங்கவில்லை. அதற்காக ஓசியிலும் பணியாற்றவில்லை. படத் தயாரிப்பில் தன்னையும் ஒரு பார்ட்னராக இணைத்துக்கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் படம் வெளியாகி வசூலாகும்போது அத்தொகையில் பாதி வருமானம் இயக்குனருக்கு கிடைக்கும். இந்த டெக்னிக்கை ‘மரியாதை ராமனா என்ற டோலிவுட் படத்தில்தான் அவர் தொடங்கினார்.
இப்படம் ரூ.25 கோடி வசூலானது. இதில் பார்ட்னர் என்ற ஒப்பந்தப்படி ராஜமவுலி ரூ.11கோடி பெற்றாராம். இதேபாலிசியைத்தான் ரஜினியும் கடந்த சில வருடங்களாக கடைபிடித்து வருகிறார்.

0 comments:
Post a Comment