தமிழில் வேட்டையாடு விளையாடு, போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்ளிட பல படங்களில் குத்தாட்டம் மற்றும் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் முமைத்கான்.
இவரின் குத்தாட்டத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 200 மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடியுள்ளார்.
இப்படி கவர்ச்சி நாயகியாக வலம் வந்த முமைத்கான் தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.இதற்கு அடிக்ஷன் என்று பெயர் வைத்திருக்கிறார்.
முதல் ஏசியன் மியூசிக் வீடியோ என்ற பெருமையையும் பெற்று இந்த ஆல்பம் யூடியூபில் வெளியான ஒரு வாரத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.
இந்த மியூசிக் ஆல்பம் எடுப்பதற்கான ஆசை வந்ததற்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பாடகி ஷகிராதான் காரணம் என்கிறார் முமைத்கான்.இந்த மியூசிக் ஆல்பத்திற்கு சர்வதேச புகழ்பெற்ற டினே ஷெய்ஸ்வுட் இசையமைத்திருக்கிறார்.

பாடகியாக மாறிய குத்தாட்ட நாயகி
ReplyDelete