மதுபானங்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் இன்று மின்சார, மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட திருத்த மசோதாவில் கூறியுள்ளதாவது, அரசுக்கு கூடுதல் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு, பெருமளவில் விதிக்கப்படதக்க ஆயத் தீர்வையை, லிட்டருக்கு 125 ரூபாயில் இருந்து சாதாரண வகைகளுக்கு லிட்டருக்கு 250 ரூபாயாகவும், நடுத்தரவகைகளுக்கு லிட்டருக்கு ரூ.300 ரூபாயாகவும், உயர்தர வகைகளுக்கு லிட்டருக்கு 500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதற்கேற்ப சட்ட திருத்தம் செய்யப்படுகிறது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பால் மது விலை அதிகரிக்க உள்ளது. இது மது குடிப்போருக்கு சோக செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டு குடிகாரர்களுக்கு சோகச் செய்தி!
ReplyDelete