அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு தன் கால் அறுவை சிகிச்சையை செய்துக்கொள்வாரா அல்லது படத்தில் நடிப்பாரா என்ற ரசிகர்களுக்கு ருசியன தகவல் வந்துள்ளது.
வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார், இப்படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணா நடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளரும் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் அஜித்திற்கு ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் இந்த முடிவாம். அனேகமாக வீரம் படத்தை தயாரித்த நாகிரெட்டியே இப்படத்தை தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இதுகுறித்து பல தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment