அன்று தெருவில் இருந்தேன்! இன்று அமைச்சராக இருக்கிறேன்!!

டெல்லி நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான் இன்று மனித வள மேம்பாட்டுத்து துறை அமைச்சராக ஆகியுள்ளேன் என்று ஸ்மிதி ராணி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் பிரதமர் மோடி என்னை இளைய சகோதரி என அழைத்தது தான்.

அதை நினைத்தால் இப்போதும் எனக்கு கண்ணில் நீர் வழியும், தொண்டை அடைத்துக் கொள்ளும். நான் சிறு வயதில் டெல்லி நகர வீதிகளில், வீடுவீடாக அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளேன்.

என் தாய் டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில், 'ஹவுஸ் கீப்பிங்' எனப்படும், சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை வகித்துள்ளார். நான் டெல்லி ஆர்.கே.நகர் கூரைப் பள்ளியில் தான் படித்தேன்.

என் தாய் எந்த ஓட்டலில் வேலை பார்த்தாரோ, அந்த ஓட்ட லின் எதிரே பிரமாண்ட பங்களாவில் இப்போது நான் வசிக்கிறேன். இதெல்லாம், என்னை இளைய சகோதரியாக ஏற்று கொண்ட பிரதமர் மோடி வழங்கியவை.

என் முந்தைய பணிகளைப் பார்த்து, அமைச்சர் பதவியை மோடி வழங்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கியுள்ளார்.

மேலும் தரையை பெருக்கச் சொன்னாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ள இந்த பொறுப்பை நான் எந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளேன் என்பது போகப் போக அனைவரும் அறிந்து கொள்வர் என்று கூறியுள்ளார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. அன்று தெருவில் இருந்தேன்! இன்று அமைச்சராக இருக்கிறேன்!!

    ReplyDelete