கோலிவுட்டிலுள்ள சில ஹீரோயின்கள், தங்கள் பெயர்களை மாற்றி ரசிகர்களைக் குழப்பி வருகிறார்கள். ஹன்சிகா மோத்வானி என்ற பெயரில் அறிமுகமானவர், பிறகு மோத்வானியை துறந்தார்.
தமன்னா தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது, கூடுதலாக ஒரு ஏ சேர்த்து கொண்டார். லட்சுமி ராய், ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். சுனேனா, தன் இயற்பெயரான அனுஷாவை பயன்படுத்தினார்.
ஒர்க்கவுட் ஆகாததால், மீண்டும் சுனேனா ஆகிவிட்டார். ஜனனி அய்யர் என்று அறிமுகமானவர், இப்போது ஜனனி ஆகிவிட்டார். ஹாசினி, சாரிகா என்று பெயரை மாற்றியுள்ளார்.
நந்தகி என்ற பெயரில் நடித்த மனோசித்ரா, அது ஒர்க்கவுட் ஆகாததால் மீண்டும் மனோசித்ரா ஆகிவிட்டார். தாமரை என்ற பெயரில் நடித்த ஷாம்னா காசிம், பூர்ணா ஆகிவிட்டார்.
கவிதா நாயர் என்ற பெயரில் நடித்தவர், மோகனா நாயர் என பெயர் மாறியுள்ளார். இதயா என்ற பெயரில் நடித்தவர், ஈடன் என்ற இயற்பெயரை பயன்படுத்துகிறார். பாவனா ராவ், தன் பெயரை ஷிகா என்று மாற்றி நடித்தார், மீண்டும் பாவனா ராவ் என்ற பெயரையே பயன்படுத்துகிறார். சில படங்களில் நடித்துள்ள அத்வைதா, இப்போது கீர்த்தி ஷெட்டி ஆகிவிட்டார்.

0 comments:
Post a Comment