தமிழில் கருணாஸ் ஜோடியாக, சந்தமாமா, சரத்குமார் நடித்த அச்சம் தவிர் ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். இவர் இப்போது ரூட்ஸ் என்ற டாகுமென்டரி படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இந்திய பாரம்பரிய இசையை பற்றிய படமான இதில், இசை அமைப்பாளர்கள் விஷால் பரத்வாஜ், ஏ.ஆர்.ரகுமான், சுபா முத்கல், இமிதியாஸ் அலி உட்பட பலர் பேட்டியளித்துள்ளனர்.
இதுபற்றி ஸ்வேதா பாசு கூறும்போது, கடந்த மூன்று வருடங்களாக ரிசர்ச் செய்து இதை உருவாக்குகிறேன்.
விரைவில் முடிவடையும் நிலையில் ரூட்ஸ் இருக்கிறது. இதற்கு முன்னதாக ஐஎன்டி என்ற இந்தி குறும்படத்தில் நடித்துள்ளேன். இதற்கு ரவி.கே.சந்திரன் மகன் சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்றார்.

0 comments:
Post a Comment