எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல்



எபோலா வைரஸ் மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்தானதொன்றாகும். 

1976ஆம் ஆண்டு ஆபிரிக்க கொங்கோ குடியரசின் எபோலா ஆற்றங்கரையில் இவ்வைரஸ் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா என்ற பெயர் ஏற்பட்டது

இந்த வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டவர்களில் 90 வீதமானோர் உயிரிழக்கின்றனர். 

ஆபிரிக்காவைச் சேர்ந்த பழந்தின்னி வௌவ்வால்களே இந்த வைரஸ் பரம்பலுக்கு மூல காரணமென நம்பப்படுகிறது. 

கொரில்லா, சிம்பன்சி, குரங்கு, மறிமான், முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்கினங்களும் இந்த வைரசை உள்வாங்கி அதன் பரவலுக்கு காரணமாக அமைகின்றன. 

எபோலா வைரசில் சையர், சூடான், Bundibugyo புண்டிபுஞ்சோ, Reston ரெஸ்டன், Tai Forest டாய் ஃபொரெஸ்ட் என்ற வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன.

Zaire ebolavirus (EBOV), Sudan ebolavirus (SUDV), Bundibugyo ebolavirus (BDBV), Reston ebolavirus (RESTV), Taï Forest ebolavirus (TAFV).

இவ்வைரஸ், நோய் வாய்ப்பட்டவரின் இரத்தம், சுரப்பி, திசு, உடல் திரவம் என்பவற்றால் மற்றொருவருக்குப் பரவுகிறது. 

நோய்வாய்ப்பட்டவரின் உடலிலிருந்து வெளியாகும் வாயு மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

2 இலிருந்து 21 நாட்களுக்குட்பட்ட நோயரும்புகாலம் முடிவடைந்ததும் கடுங்காய்ச்சல், பலவீனம், தசை வலி, தலைவலி, தொண்டைப்புண் என நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. 

பின்னர் அது வாந்தி, பேதி, தோல் அரிப்பு (rash), சிறுநீரகமும் (kidney) கல்லீரலும் (liver) பலவீனப்படல் என்று தொடர்ந்து, பின்னர் உடலின் உள்ளும் புறமும் குருதி ஒழுக்கு ஏற்பட்டு மரணத்தில் முடிவடைகிறது. 

எபோலா வைரஸ் தாக்கத்தை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் தொழிற்பட இடமளிக்காத அளவுக்கு இவ்வைரஸ் மிக விரைவாகப் பெருக்கம் எடுக்கிறது. 

இதனைக் கட்டுப்படுத்தும் மருந்தோ தடுப்பூசியோ இதுவரை கண்டறியப்படவில்லை.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment