ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் வெளியுலகிற்கு வந்து உதவி கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் பல ஆண்டுகளாய் அமேசான் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பாட்டியா கிராமத்தில் உள்ள என்விரா ஆற்றில் ஆடைகளற்ற நிலையில் காணப்பட்ட ஏழு பழங்குடியினர், பிரேசிலின் அசானிங்கா பழங்குடியின உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஏனெனில் தாங்கள் வசிக்கும் பகுதியில் போதைப்பொருள் கும்பல் ஒன்று தங்கள் இனத்தை சேர்ந்த மூன்று பேரை கொன்று புதைத்துவிட்டனர் என்றும் தங்களது குடிசைகளை காலி செய்யுமாறு தொடர்ந்து மிரட்டல்களை விடுத்து வரும் அவர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள ஆயுதங்கள் வேண்டும் எனவும் உதவி கேட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment