குஜராத் மாநிலத்தில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட தக்காளி திருவிழா, உள்ளூர் மக்களை கோபமடைய செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் நேற்று நண்பர்கள் தினத்தையொட்டி 'லாடொமாட்டினா' என்ற தக்காளி திருவிழா நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழாவில் சூரத், வதோதரா மற்றும் அருகில் உள்ள வல்லப்வித்யா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்கள் கலந்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் தக்காளி பழங்களை வீசியடித்து விளையாடியுள்ளனர்.
ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விலைக்கு விற்கும் நிலையில் 3 டன் தக்காளிக்களை வீணடித்தது உள்ளூர் மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.300 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தக்காளியை வீணடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இச்செயலிற்கு முன்னாள் அமைச்சர் புபேந்திர லகாவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் விழாவில் கலந்துக்கொண்ட வாலிபர்களோ நாங்கள் இதை விளையாட்டிற்காக செய்தோம், இதில் என்ன இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 comments:
Post a Comment