இன்னும் 50 வருடங்களில் பூச்சுக்களையும், புழுக்களையும்தான் மனிதர்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.
விவசாயம் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருப்பதால் மனித குலத்திற்கு இந்த நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரித்திருந்தது.
இதற்கான அறிகுறிகள் தென்படவும் ஆரம்பித்துள்ளன. கோவை மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களின் பரப்பு பெருமளவு குறைந்து விட்டதால், இனி விவசாய பணிகள் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சாயக்கழிவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் மழை இல்லாததாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக கிணற்றுப்பாசனத்தையும், ஆழ்துளை கிணற்றுப்பாசனத்தையம் நம்பி இருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லாததால் விவசாயப்பணியில், நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ? என விவசாயிகள் பயப்படுகின்றனர்.
இதனால் விவசாயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாமல், வேறு எந்த தொழிலில் லாபம் கிடைக்கும் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
சிலர் மாற்று தொழிலுக்கு மாறியுள்ளதால், கோவையில் விவசாயம் தொடருமா? என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, கோவையில் முன்பிருந்ததை போல் பாசன வசதி இல்லை சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கான வசதிகளை அரசு செய்து கொடுத்தால் விவசாயம் செழிக்கும் என தெரிவித்துள்ளனர்.
விதைப்பதற்கு ஆள் இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தால் என்ன? எதை உண்பது என்ற கேள்வி எழுகிறது.

0 comments:
Post a Comment