தமிழகத்தின் தூத்துக்குடியில், மது அருந்திவிட்டு மக்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சித்தர் சாமியாரைக் காண பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி அருகேவுள்ள முத்தையாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில், சித்தர் சாமி என்றழைக்கப்படும் முருகன் மக்களுக்கு அருள்வாக்கு அளித்துள்ளார்.
அவர் வெறும்காலில் அரிவாள் மீது ஏறி நின்றுகொண்டு மதுவை குடித்தும், மிகப்பெரிய சுருட்டை வாயில் புகைத்துகொண்டே அருள்வாக்கு அளித்ததை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர்.
மேலும், அவரை பார்க்க கோவிலுக்கு வந்தவர்களில் மது அருந்தி வந்தவர்களை சித்தர் சாமி முருகன் எச்சரித்து வெளியே அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment