கேராளவில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் ரகசியமாக கண்காணிப்பை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் உபயோகித்த வாலிபன் ஒருவனை கைது செய்து அழைத்து சென்றபோது அவன் மயக்கமடைந்துள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவன், உடல்நிலை தேறிய பின் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையில் கேரளபுரம் பலாவிளை பகுதியை சேர்ந்த மாஹின்ஷா (19) என்ற இந்த வாலிபன் கடந்த சில வருடங்களாக போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பொலிசாரிடம் கூறியதாவது, எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தியது அலுத்துப்போகவே என்ன செய்யலாம் என இணையதளத்தை அலசி பார்த்ததில் சில நாடுகளில் பாம்புக்கடி போதை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இந்த பாம்பக்கடி போதை என்பது, 100 மில்லி பாட்டில் ஒன்றில் குட்டி விஷப் பாம்பு போடப்பட்டிருக்கும்.
பாட்டிலின் மூடி நாக்கின் அடியில் வைத்து திறக்கப்படும். இதன்பின் பாம்பு வெளியே வந்து கொத்திய சில நிமிடங்களில் போதை தலைக்கேறி மயக்கம் ஏற்பட்டு விடும்.
நான் பேஸ்புக் மூலம் தேடி பார்த்ததில் கொச்சியில் டோனி என்பவர் இந்த பாம்புக்கடி போதையை பயன்படுத்தி வந்ததை அறிந்தேன்.
எனவே கொச்சி சென்று டோனியிடம் பாம்பு கடி போதையை பயன்படுத்தி வந்தேன் என்றும் ஒரு முறை பாம்பு கடி போதைக்கு டோனி ரூ.1000 வசூலிப்பர் எனவும் கூறியுள்ளார்.
இந்த விசாரணைக்கு பின்னர் பொலிசார் மாஹின்ஷாவை கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

0 comments:
Post a Comment