சத்தமில்லாமல் சாதிக்கும்! கதை திரைக்கதை வசனம் இயக்கம்

தமிழ் திரை உலக ஜாம்பவான்கள் இருந்த கால கட்டத்திலும் இயக்குநர் விசுவின் குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்‌களுக்கும் ரசிகர் கூட்டம் இருந்தது. அதேபோன்று நக்கல், நையாண்டி வசனங்களுக்கு பெயர்போன நடிகர், இயக்குநர் பார்திபனுக்கும் தமிழ் திரை உலகில் ஒரு தனி இடம் உண்டு.

படத்தின் தலைப்பு முதல் படத்தின் வசனங்கள் வரை இவரது கவித்துவத்தையும் சமூகம் சார்ந்த சாடலையும் காண முடியும். அந்த வகையில் சமீபத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்துடன் மோதிய இயக்குநர் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படம் திரையுலக விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

படத்தில் மட்டுமல்ல படத்தின் விளம்பரத்தில் கூட வித்தியாசம் கட்டிய இயக்குநர் பார்த்திபன், ‘அஞ்சான்’ படத்திற்கு திரைப்படக் கட்டணம் கிடைக்காதவர்கள் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் பாருங்கள் என்று அறிவித்தார். 

கோடிக்கணக்கில் வசூல் என சொல்லிக் கொள்ளும் படங்களுக்கு மத்தியில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் ஆரம்பத்தில் வெளியிட்ட திரையரங்குகளைக் காட்டிலும் தற்பொழுது அதிக திரையரங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment