திருடன் போலீஸ்! அடுத்த மாதம் திரைக்கு வருகிறது!

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் திருடன் போலீஸ் திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப் பட உள்ளது. எஸ்பிபி.சரண் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். 

படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துள்ள நிலையில் வெளியீட்டு பணிகளும் மும்முரமாய் நடப்பதால் தாயாரிப்பு நிறுவனத்தார் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அட்டகத்தி, குக்கூ போன்ற வித்தியாசமான படைப்புகளில் நடித்திருந்த நடிகர் தினேஷ், திருடன் போலீஸ் படத்தின் மூலம் அதிரடி நாயகனாக அங்கீகரிக்கப்படுவார் என எதிர்வு கூறப்படுகின்றது.

‘திருடன் போலீஸ்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் , பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் இசை தொகுப்பில் மறைத்த காவிய கவிஞர் வாலியின் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘மூடு பனிக்குள் ஓடி திரியும், மேகம் போல மயக்க நிலை ‘ என்ற அந்த பாடல் கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் என்பது உண்மை. இந்த பாடல் எஸ்பிபி.சரண் தயாரிப்பில் உருவான ‘ ஆரண்ய காண்டம்’ படத்திற்காக இயற்றபட்டது. ஆனால் படமாக்கப்படவில்லை. 

எனவே சரண் தற்போது இந்த பாடலை திருடன் போலீஸ் படத்திற்காக பயன்ப் படுத்தி உள்ளார். தான் மறைந்த பின்னரும் தனது பாடல்களால் கவிஞர்கள் என்றும் மறையாது வாழ்ந்துக் கொண்டு தான் உள்ளனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment