இரத்தத்தில் உள்ள பொருட்கள்!
இரத்த சிவப்பு அணுக்கள் -இரத்த வெள்ளை அணுக்கள் -பிளேட்டலேட்டுகள் என இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஒட்சிசனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை நோய் ஏற்படும்.
இரத்த சோகை இரத்த இழப்பு ஏற்படும்போது இரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு இரத்தத்தில் 55 இலட்சம் இரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும்
இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்கள்- வெள்ளை அணுக்கள்- பிளேட்டலேட்டுகள் உற்பத்தியாகின்றன.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்- முட்டைக்கோஸ்- முட்டை- இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை அண்டாது.
இரத்த வெள்ளை அணுக்களின் தொழில் என்ன?
இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை இரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
இரத்தத்தில் உள்ள ‘பிளேட்லேட்’ அணுக்களின் தொழில் என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி ‘பிளேடN;லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் இரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும்.
டெங்கு- கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலேட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லீpட்டர் இரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு இரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும்.
மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர் விட்டமின்கள்- தாதுப்பொருள்கள்- இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தம்.
இதயத்திலிருந்து ஒரு நிமிடத்துக்கு ஐந்து லீட்டர் இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிடத்துக்கு 250 மில்லி லீற்றர் இரத்தம் தேவை.
உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு ?
ஒரு சுழற்சியில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! இரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.
மருந்து உட்கொண்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?மருந்து உட்கொண்டவுடன் அதில் உள்ள மருந்துப் பொருள் இரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் இரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை இரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து- மாச் சத்து- புரதம்- தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஒட்சிசனை எடுத்துச் செல்வதும் இரத்தம் தான்.
இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை இரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் இரத்தம் தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு? 24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லீற்றர் இரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லீற்றர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்று நோயா? இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பின்னர் இந் நோய் வர வாய்ப்பில்லை.
மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன? மூளையின் செல்களுக்கு ஒட்சிசனை எடுத்துச் செல்லுவது இரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு ஒட்சிசன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும்.
உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இரத்தம் உறைவதற்கு எது அவசியம்? இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. ஒரு லீட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.
இரத்தத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? இரத்தத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஏ- பி- ஏபி – ஓ என நான்கு பிரிவுகள் உள்ளன. இது நான்கைத் தவிர ஏ1-ஏ2 என்ற உப பிரிவுகளும் இரத்தத்தில் உண்டு.
ஓ பிரிவு இரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான் ஓ பிரிவு இரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
இரத்தம் எவ்வாறு பிரிவு வாயாக பிரிக்கப்படுகிறது?இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குழுவாகப் பிரிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் ஏ ஆன்டிஜன் இருந்தால் ஏ பிரிவு ஆகும்.
பீ ஆன்டிஜன் இருந்தால் பீ பிரிவு ஆகும். ஏபீ என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் ஏபீ பிரிவாகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் ஓ பிரிவாகும்.

0 comments:
Post a Comment