ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிவரும் படம் 'ஐ'. இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சிஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் டீஸராவது வந்துவிடாதா என ஒட்டு மொத்த திரையுலகமும் ஏங்கிக் கிடக்க, தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. செப்டம்பர் 15ம் திகதி 'ஐ' படத்தின் இசை ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ளப் போகிறார். அவரை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பதற்காக 'ஐ' படத்தின் இணை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு அர்னால்டை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

0 comments:
Post a Comment