மணிரத்னம் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
‘கடல்' படத்தையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் பேச்சுவார்த்தையோடு நின்றுபோனது.
இதையடுத்து மம்மூட்டி மகன் துல்கர் சல்மானை வைத்து புதிய படத்தை இயக்க எண்ணினார் மணிரத்னம். ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் அலியா பட் நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஏற்கனவே அலியாபட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதானா?' என்று துல்கர் சல்மானிடம் கேட்டபோது, ‘இது இயக்குனர் கையில்தான் உள்ளது. இப்படியொரு படம் உருவாகிறதா, அதை மணிரத்னம் இயக்குகிறாரா? இது பற்றி அவர்தான் அறிவிக்க வேண்டும். இதுபற்றி வேறு எதுவும் என்னால் இப்போதைக்கு கூற முடியாது' என்றார்.

0 comments:
Post a Comment