வரவேற்பைப் பெற்றுவரும் LG செல்போன்கள்

ஆன்டிராய்டு ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் வந்த பின்னர் 70 சதவீத செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இதையே பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் சிறிய அளவிலான நிறுவனங்கள் கூட தங்களின் செல்போன்களில் ஆன்டிராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் செல்போன்களை விற்று வருகிறது. பிரபல எலக்ட்ரானிக் நிறுவனங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதில் எல்ஜி நிறுவனம் நீண்ட காலமாக செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் சந்தையில் ஒரு நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த நிலை மாறி எல்ஜி தயாரிப்புகளுக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து “நெக்சஸ் 5” மாடல் செல்போன் தயாரித்ததுதான். இந்த வெற்றியை தொடர்ந்து எல்ஜி நிறுவனம் தற்போது புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு “எல்ஜி ஜி3” என பெயரிட்டுள்ளது. இதில் அதிவேகமாக செயல்படும் குவாட்கோர் பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேகமாக டவுன்லோட் செய்யலாம். மேலும் மொபைல் அப்ளிகேஷன்கள் சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படுவதற்கு வசதியாக 3ஜிபி ரேம் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர 13 எம்பி பின்பக்க கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா, 32 ஜிபி/16ஜிபி இன்பில்டு மெமரி, 5.5 டச் ஸ்கீரின், 10மணி நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் வகையிலான 3000 மெகஹர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிம்கார்டு போடும் வகையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ள இந்த ஜி3 செல்போன், சந்தையில் எல்ஜி நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தரும் என அந்நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதன்விலை மற்றும் இதர விவரங்களை எல்ஜி நிறுவனம் விரைவில் வெளியிடும். இதன் மூலம் செல்போன் விற்பனையில் எல்.ஜி நிறுவனமும், தனி அந்தஸ்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment