நவீன, புதுப்பொழிவுடன் சுசுகி ஸ்கூட்டர் அறிமுகம்!

சுசுகி நிறுவனம் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய “லெட்ஸ்” வகை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிவிஸ்-சுசுகி கூட்டு நிறுவனம் தனித்தனியாக பிரிந்த பின்னர் இரண்டு நிறுவனங்களுமே போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. இதில் டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டி பெப், பெப் பிளஸ், டிரண்ட்ஸ் என்ற பெயர்களில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

குறிப்பாக ஸ்கூட்டி பெண்களை மிகவும் கவர்ந்தது. இதை தொடர்ந்து அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியது. குறிப்பாக ஹோன்டா நிறுவனம் ஆக்டிவா என்ற பெயரில் 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. 

இதன் பின்னர் ஸ்கூட்டியின் விற்பனை லேசாக பாதித்தது. இந்நிலையில் தற்போது இவ்விரண்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த சுசுகி நிறுவனம் 125 சிசி திறன் கொண்ட ஸ்விஷ் வகை ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் அதிக இடவசதி மட்டுமல்லாமல் மிகவும் ஸ்டைலான தோற்றங்களுடன் 5 வெவ்வேறு வித நிறங்களில் அறிமுகப்படுத்தியது. 

மேலும் விலையும் ஆக்டிவா வாகனத்தின் விலையை காட்டிலும் ரூ.5 ஆயிரம் வரை குறைவாக இருந்தது. இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதை தொடர்ந்து சுசுகி நிறுவனம் நடுத்தர மக்களின் வசதிக்கேற்ப பட்ஜெட் ஸ்கூட்டர் தயாரிக்க முடிவு செய்தது. இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் 110 சிசி சக்தியுடன் கூடிய “லெட்ஸ்” ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதில் சுசுகி எகோ பர்பாமென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு சிலிண்டர், இரண்டு வால்வ் மற்றும் 4-ஸ்ட்ரோக் மற்றும் 8.7 குதிரைத்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் ஸ்டைலான வடிவில் உள்ள இந்த ஸ்கூட்டரின் எடை 98 கிலோ மேலும், செல்ப் மற்றும் கிக் ஸ்ட்ராட், சிவிடி என்ஜின், டியூப் லெஸ் டயர்கள் என ஏராளமான அம்சங்கள் இந்த வண்டியில் உள்ளது. இதன் விலை ரூ.45,384(எக்ஸ் ஷோரும் விலை). மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் விலை குறைவாக உள்ளதால் “லெட்ஸ்” ஸ்கூட்டரும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment