மீண்டும் ஆர்யா பூஜா?

ஆர்யா, பூஜா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்யா கதாநாயகிகளுக்கு பிடித்த நடிகராக இருக்கிறார். இவருடன் ஜோடி சேரும் நடிகைகள் எல்லோருடனும் இணைத்து பேசப்பட்டு உள்ளார். கடைசியாக நயன்தாராவுடன் கிசு கிசுக்கப்பட்டார். அவரை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்தும் கொடுத்தார்.

இருவரும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது சிம்பு படத்தில் நயன்தாரா நடிப்பதால் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்யா பிடிக்குள் இப்போது பூஜா புதிதாக வந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது.

இருவரும் ‘ஓரம்போ’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். உள்ளம் கேட்குமே, நான் கடவுள் படங்களிலும் சேர்ந்து நடித்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த புதிதில் நெருக்கமாக பழகுவதாகவும் தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் பரவியது. பிறகு வெவ்வேறு படங்களில் அவர்கள் நடிக்க துவங்கியதும் இந்த கிசு கிசுக்கள் அடங்கி போனது.

ஆனால் கடந்த வாரம் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் இருவரும் திடீரென சந்தித்து கொண்டனர். அப்போது பழைய நெருக்கத்தை மீண்டும் புதுபித்துக் கொண்டார்களாம். கேரவனில் தனியாக நீண்ட நேரம் உட்கார்ந்து பேசி உள்ளனர். இந்த ரகசிய சந்திப்பு படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment