ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சம்பந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி திரைப்பிடத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பு முடிந்ததும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த பாடல் காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் முடிவசெய்துள்ளார்.
இதற்காக விஜய், சமபந்தா உள்ளிட்ட ''கத்தி'' குழுவினர் ஐரோப்பா செல்ல தயாராகி வருகின்றனர்.
பிரான்ஸ், இத்தாலி, நோர்வே ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்று தமிழ் அமைப்பினர் அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கத்தி படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு படப்பிடிப்பிற்காக வருகின்றனர் என்ற செய்தி அறிந்ததும் புலம்பெயர் தமிழ் அமைப்பினர் கத்தி படக்குழுவினருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட இப்பொழுதே தயாராகி வருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை எந்தவொரு அமைப்பும் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை வெளியிட்டதாக அறியமுடியவில்லை.
லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்களை அழித்த இலங்கை அரசாங்கத்துடன் கூட்டணி சேர்ந்து தயாராகும் படத்தின் படப்பிடிப்பிற்கு கறுப்புக்கொடியை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என தமிழ் அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் கூறிவருவது தெரிந்ததே.
இதனால் கத்தி படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment