50 ஷேட் ஆஃப் கிரே (Fifty shades of grey) ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் தான் 2014ஆம் ஆண்டில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட ட்ரெய்லராகும்.
இ.எல்.ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய 50 ஷேட் ஆஃப் கிரே என்ற புத்தகம் விற்பனையில் உலகளவில் சக்கைபோடு போட்டது.
ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு புத்தகத்தை வாங்கி ஜேம்ஸின் வங்கிக் கணக்கின் இருப்பை அதிகரித்தனர்.
இந்தநிலையில் தான், இந்த 50 ஷேட் ஆஃப் கிரே புத்தகத்தை படமாக்கினால் என்ன என்று ஹாலிவுட்காரர்களுக்குத் தோன்றியது.
50 ஷேட் ஆஃப் கிரே புத்தகம் உலக அளவில் 10 கோடி அளவுக்கு விற்பனை ஆனது. இந்தப் புத்தகம் 52 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
புத்தகமே இப்படி சக்கை போடு போடுகிறது என்றால் அதை படமாக்கினால் நிச்சயம் சூப்பர் டுப்பர் ஹிட் தான் என நினைத்த ஹாலிவுட்காரர்கள் அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே படத்தை எடுத்து வருகின்றனர்.
50 ஷேட் ஆஃப் கிரே படத்தில் கிறிஸ்டியன் கிரேயாக ஜேமி டோர்னனும், அனஸ்தேசியா ஸ்டீலாக டகோட்டா ஜான்சனும் நடித்து வருகின்றனர்.
50 ஷேட் ஆஃப் கிரே படத்தின் ட்ரெய்லர் வெளியிட்ப்பட்ட ஒரு வாரத்தில் அதை யூ டியூப்பில் 3 கோடியே 60 லட்சம் பேர் பார்த்துளு;ளனர்.
இந்த ஆண்டில் உலகளவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர் என்றால் அது 50 ஷேட் ஆஃப் கிரேவின் ட்ரெய்லர்தான்.
இதற்கு முன்பு டீனேஜ் ம்யூடன்ட் நின்ஜா டர்ட்டில்ஜ் படத்தின் ட்ரெய்லர் தான் அதிகம் (3 கோடியே 10 லட்சம்) பார்க்கப்பட்டதாகும்.
இந்தப் பட்டத்தின் ட்ரெய்லரையே உலக மக்கள் இத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்றால் படம் ரிலீஜானால் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

0 comments:
Post a Comment