இந்த மாதம் மட்டும் மூன்று வெவ்வேறு விமான விபத்துகளில் 465 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
இது தவிர மார்ச் மாதம் மாயமான MH370 மலேசியன் விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை மர்மமாகவுள்ளது.
இந்நிலையில், உலக சாதனையை நிலைநாட்டுவதற்காக ஒற்றை இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் 30 நாட்களில் உலகை வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது இளைஞன், அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலில் விமானத்தோடு விழுந்து நொறுங்கி பலியாகியுள்ளார்.
![]() |
| (ஜூன் மாதம் உலக சாதனை புரிய புறப்படுவதற்கு முன் தனது தாயை கட்டி அணைக்கும் ஹாரிஸ்) |
ஹாரிஸ் சுலைமான் என்ற அந்த இளைஞர் தனது தந்தை பாபர் சுலைமானுடன், கடந்த ஜூலை 10ஆம் திகதி இலங்கையின், கொழும்பில் இருந்து புறப்பட்டு, 7 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் சுபாங் விமான நிலையம் வந்தடைந்தார்.
ஹாரிஸுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தங்களது 30 நாட்கள் பயண இலக்கை அவரால் அடைய முடியவில்லை.
![]() |
| (தனது தந்தை பாபருடன் ஹாரிஸ்) |
எனினும், ஹாரிஸ் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, 15 நாடுகளில் உள்ள 25 முக்கிய நகரங்கள் வழியாக, சுமார் 41,843 கிலோமீட்டர் பயணம் செய்வது என்று முடிவெடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சமோவா தீவில் இருக்கும் பாகோ நகரிலிருந்து விமானத்தை புறப்பட்ட ஹாரிஸின் விமானம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இந்த விபத்தில் ஹாரிஸ் மற்றும் அவரது தந்தை பாபர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
![]() |
| (பசிபிக் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஹாரிஸின் உடல்) |
ஹாரிஸின் இந்த சாதனை முயற்சி, வெற்றி பெற்றிருந்தால், இதற்கு முன்பு 19 வயது இளைஞர் ஒருவர் 30 நாட்களில் உலகை வலம் வந்த சாதனையை ஹாரிஸ் முறியடித்திருப்பார்.





we are updating : Aachi News, online tamil news, tamil cinema, tamil actors, tamil actresses, astrology, pictures, videos, photo gallery, world news, indian top news, chennai news, கேலரி, ஜோதிடம், தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட் , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, கிசுகிசு, சினிமா விமர்சனம், சினி தகவல்கள், தமிழ் செய்தி, செய்தி, india news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news, news, tamil website, current events, latest news, political news, cinema news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional news India, indian newspaper, indian daily news, indian news online, indian tamil news, puthinam
ReplyDelete