விண்வெளியை மேலும் துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய உலகில் மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிக் கருவியொன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப்ஸ் விண்வெளி தொலைநோக்கி எனப் பெயரிடப்பட்டிருக்கம் இந்தக் கருவி எதிர்வரும் 2018ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்தக் கருவியை உருவாக்குவதற்கான பணிகளை நாசா ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. நாசா விஞ்ஞானிகளும்- பொறியியலாளர்களும் இணைந்து இதனைத் தயாரித்துவருகின்றனர். இதனைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் செலவு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
30 வருடங்களுக்கும் மேலான நாசாவின் தேவையை இந்தத் தொலைநோக்கி நிறைவேற்றும் எனக் கூறப்படுகிறது. 30 அடி நீளமான கண்ணாடி அல்லது கார்பன் இளையினால் தயாரிக்கப்பட்ட தட்டையான மேற்பரப்பொன்றில் பொருத்தக்கூடிய வகையில் இந்தத் தொலைநோக்கி வடிவமைக்கப்படவுள்ளது.
இந்தத் தொலைநோக்குக் கருவியானது தற்போது பெறும் விண்வெளி தொடர்பான காட்சிகளை மேலும் 70 மடங்கு துல்லியமாக வழங்கக்கூடியது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment