சுருக்குச் சொற்களும், விரிவாக்கமும்!

இன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்கள் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. 

இதனைத்தவிர பொருட்கள், கருத்துக்கள், இடங்கள் கூட இலகுவிற்காக சுருக்குச் சொற்களாலேயே பயன்படுத்தப்படுகின்றன. சிலரின் பெயர்கள் கூட சுருக்குச் சொற்களினாலேயே அழைக்கப்படுகின்றன.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவை குறைவுதான். சில சுருக்குச் சொற்கள்தான் பெரும்பாலானோருக்குத் தெரியும். விரிவாகம் சொன்னால் குழம்பிவிடுவார்கள். உதாரணம் DNA, ICU என ஏராளம். நூல்களில்கூட சில நேரம் சுருக்குச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுருக்குச் சொற்களை அறிந்துகொள்வதற்கு சில பேருக்கு ஆர்வமும், தேவையும் இருக்கும். இணையத்தில் தேடினால் அவை ஒரே இடத்தில் இதுவரை கிடைத்ததில்லை. எனினும், தற்போது அந்தக் குறையும் தீர்க்கப்பட்டுள்ளது.

சுருக்குச் சொற்களுக்காக ஒரு இணையத்தளமே இருக்கின்றது. அதன் பெயர் All acronyms. இந்த முகவரியில் www.allacronyms.com இணையத்தைப் பார்வையிடலாம். 

இந்தத் தளத்தில் 28 லட்சத்து 84 ஆயிரம் சுருக்குச் சொற்கள், சுமார் 2,000 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இந்தத் தளம் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் தளத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment