சீனாவிலிருந்து இவ்வாறான சம்பவங்களும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாவதுண்டு. இதேபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த இணைய மையத்திற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த இரண்டு கொள்ளையர்கள், அங்கிருந்த ஒரு இளம்பெண்ணைக் கடத்திச் சென்றனர்.
இதனைத் தடுக்க முயற்சித்த உரிமையாளரையும் கொள்ளையர்கள் தாக்கினர். பெரும் போராட்டத்தில் உரிமையாளர் படுகாயமடைந்து தோற்றுப்போனார்.
இவ்வளவு களேபரம் நடந்தபோதிலும், இணைய மையத்திற்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர்களின் பணிகளிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV இல் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானதை அடுத்து பெரும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் புகுந்து, பெண்ணைக் கடத்தி, தடுக்கச் சென்றவரைத் தாக்கி, வெட்டிச் சென்றனர். இருந்தாலும், இணைய மையத்தில் இருந்த ஏனையோர் கம்பியூட்டரில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
மனிதநேயமும், உணர்ச்சியும் சிறிதும் இல்லாமல், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் மீது தற்போது சமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
கொள்ளையர் தாக்கும்போது தடுக்காவிட்டாலும், கொள்ளையர்கள் சென்றபின்னர் காயமடைந்த சக மனிதனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவாவது சிரத்தைக் காட்டியிருக்க வேண்டாமா என்று அங்கலாய்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment