அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்கரையில் 9 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருந்ததார். இதன்போது திடீரென அந்த கடற்கரையில் விமானம் ஒன்று தாறுமாறாக வந்து தரையிறங்கியது.
விளையாடிக்கொண்டிருந்த 9 வயது மகளை காப்பாற்ற வந்த 36 வயது தந்தை விமானம் மோதியதால் பலியானார். அவரால் காப்பாற்றப்பட்ட மகளுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகள் கடல் நீரில் விளையாடிக்கொண்டிருந்த போது தந்தைக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. இதன் பேசுவதற்காக தந்தை கரைக்கு வந்துள்ளார்.அப்போது திடீரென ஒரு சிறிய வகை விமானம் தாறுமாறாக பறந்தவாறு கடற்கரையில் தரையிறங்கியது.
இதனைக் கண்ட தந்தை மகளை காப்பாற்ற ஓடியுள்ளார். மகளை கரையை நோக்கி வேகமாக தள்ளிவிட்டு மகளின் உயிரை காப்பாற்றிய அவரால் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியாது போனது. வேகமாக வந்த விமானத்தில் மோதி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த வயதான பெண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்குள்ளான விமானத்தை 57 வயது நபர் ஒருவர் செலுத்தியுள்ளார். விமானம் அவரது கட்டுப்பாட்டை இழந்ததால் விமானத்தை கடற்கரையில் தரையிறக்க முயன்றதாக கூறிய அவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 comments:
Post a Comment