நித்தியானந்தாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.
மேலும் அவர் மீதான வழக்குகளை விசாரிக்க பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா முன்னிலையாகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா முன்னிலையாகவில்லை. இதையடுத்து அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதம் 6ஆம் திகதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ஆம் திகதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

0 comments:
Post a Comment