நாளாந்தம், வாகன விபத்துக்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. வாகன விபத்துக்கள் பல்வேறு காரணங்களில் நிகழ்கின்றன. இதில் சாரதியின் உறங்கிவிடுவதனால் ஏற்படும் விபத்துக்களும் ஏராளம்.
இவ்வாறு வாகன விபத்துக்களைத் தவிர்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்குமான முயற்சிகள், அனைத்துத் தரப்பினராலும் தொழிநுட்பரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள HARKEN என அழைக்கப்படும் சாரதியின் ஆசனப் பட்டியிலுள்ள உணர்க் கருவிகள் இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவற்றை அவதானித்து சாரதி உறங்கும் நிலைக்குச் செல்லும்போது எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றது. இதனால் விழிப்பு நிலைக்குத் சாரதி வருகின்றபோது அந்த சமிக்ஞை தானாகவே நின்று விடுகிறது.
குறித்த உறங்குநிலை கண்காணிப்பு ஆசனப்பட்டி ஆய்வு முயற்சிக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஜோஸ் சோலஸ் கூறுகையில் இந்த ஆசனப்பட்டி, வாகன விபத்துகளை தவிர்ப்பதற்கு எதுவாக அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment