போதையில் தள்ளாடியவரைக் காப்பாற்றிய செல்போன்!

சீனாவில் குடிகார நபர் ஒருவர், தனது செல்போனினால் உயிர் தப்பியுள்ளார்.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சின்சூ நகரை சேர்ந்த ஹன்பெங் என்ற நபர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

இவர் மதுக்கடையில் குடித்துக்கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் ஒருவருடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தன் துப்பாக்கியை எடுத்து ஹன்பெங்கை சுட்டுள்ளார். அப்போது அதில் ஒரு குண்டு அவரது இதய பகுதியில் பாய்ந்துள்ளது.

ஆனால் அவர் சட்டைப்பையில் வைத்திருந்த கைபேசியில் குண்டு தாக்கியதால், லேசான காயத்துடன் தப்பித்து அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இந்நிலையில் மகிழ்ச்சி அடைந்த அவர், தன் உயிரை காப்பாற்றிய செல்போனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment