திடீர் உடல்நலக்குறைவினால் நடிகர் கார்த்தி நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 30 நாட்களாக அவர் கமுதியில் நடந்த ‘கொம்பன்’ என்ற படப்பிடிப்பில் கார்த்திக் ஈடுபட்டிருந்தார். நடித்தார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்தார். முத்தையா டைரக்டு செய்தார்.
கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவில் விஷமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
எவ்வாறாயினும், கார்த்திக் தற்போது தேறிவருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரின் உறவினர் வட்டாரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment