கார்ட்போட் அட்டைகளையும் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்தி ப்ரொஜக்டரொன்றை உருவாக்கலாம் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆம்! கார்ட்போட் அட்டையால் தயாரிக்கப்பட்ட ப்ரொஜக்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆம்! கார்ட்போட் அட்டையால் தயாரிக்கப்பட்ட ப்ரொஜக்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த லக்கீஸ் என்ற நிறுவனம் இந்த கார்ட்போர்ட் ப்ரொஜக்டர்களைத் தயாரித்துள்ளது. உங்கள் ஸ்மார்ட் போன்களில் உள்ள வீடியோக்களை இந்த கார்ட்போர்ட் ப்ரொஜக்டரைப் பயன்படுத்தி பெரிய திரையில் பார்க்க முடியும்.
குறித்த கார்ட்போர்ட் ப்ரொஜக்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உருப்பெருக்க வில்லை மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள வீடியோ காட்சியை பெரிய திரையில் பார்க்க முடியும்.
இந்த ப்ரொஜக்டரின் விலை வெறுமனே 15.94 ஸ்டேலிங் பவுன்ஸ் மட்டும்தான். (சுமார் 1600 இந்திய ரூபா) உங்கள் ஸ்மார்ட்போனை கார்ட்போர்ட் ப்ரொஜக்டரில் பாதுகாப்பாக வைக்கமுடியும்.
இதில் காணப்படும் அசௌகரியம் என்னவென்றால் விரும்பிய நேரத்தில் வீடியோ காட்சியை போர்வேர்ட் பண்ணிப் பார்ப்பது மட்டும்தான். நண்பர்களுடன் சுற்றுலாச் செல்லும்போது கூடாரங்களுக்குள்ளேயே பெரிய திரையில் வீடியோ படங்களைப் பார்க்க முடியும். உருப்பெருக்க வில்லை காணப்பட்டால் நீங்களே வீட்டில் இதனைத் தயாரிக்க முடியும்.
விற்பனையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ப்ரொஜக்டருக்கான விளம்பரம் ஒன்றையும் குறித்த நிறுவனம் தற்போது தயாரித்து பிரபல்யப்படுத்தி வருகிறது.

0 comments:
Post a Comment