''சேர்ந்து போலாமா'' 100% நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது!


''சேர்ந்து போலாமா'' என்ற படத்தை நியுசிலாந்திலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அனில்குமார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து 39 படங்களை இயக்கியவர். ஜெயராமை வைத்தே 10 படங்கள் இயக்கியுள்ளார். இப்படம் இவருக்கு 40-வது படம். 

‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயங்கொண்டான்’ ஆகிய படங்களில் நடித்த வினய் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘சேர்ந்து போலாமா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மதுரிமா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தி ப்ரீத்திபால் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் நாயகனாக வளர்ந்து வரும் நந்து என்பவர் இப்படத்தில் நடித்துள்ளார். தம்பி ராமையா, அருண், தலைவாசல் விஜய், அனுஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

நியூசிலாந்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் நிறைய பேர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தம்பி ராமையாவுக்கு ஜோடியாக ஒரு வெள்ளைக்கார பெண்மணி நடித்துள்ளார். 

நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள ஆக்லேண்ட் நகரத்திலிருந்து சவுத் ஐலண்ட் எனப்படும் தெற்கு தீவுக்குக் கதை நகர்கிறது. இதற்காக சுமார் 500 கி.மீ தூரம் கதையோடு படக்குழுவும் பயணித்துள்ளது. இதற்காக கார், பஸ், ட்ரக், படகு போன்ற வாகனங்களில் மட்டுமல்ல, கால்நடையாகவும் படக்குழுவின் பயணம் தொடர்ந்திருக்கிறது. 

நியூசிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட் ஹவுஸ் போன்ற பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. நகரம், காடு, மலை, அருவி, கடல், மணல்வெளி என்று பல்வேறு புவியியல் அமைப்புகளிலும் கேமரா சுழன்று சுழன்று படப்பதிவு செய்துள்ளது. 

இப்படத்திற்கு விஷ்ணு மோகன் சித்தாரா என்பவர் இசையமைத்திருக்கிறார். சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஐஸ்வர்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் சசி நம்பீசன் என்பவர் தயாரித்துள்ளார். கேரள மாநிலம் திரிச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தில் 16 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment