தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்த நிலையில் இஸ்ரேஸ் - ஹமாஸ் தரப்புக்களுக்கிடையே போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.
12 மணி நேர போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு, அதை மேலும் 4 மணி நேரம் நீட்டிக்க இஸ்ரேல் வலியுறுத்தியது.
அதேபோல் போர் நிறுத்தத்தை 24 மணி நேரம் நீட்டிக்க ஐநா விடுத்த வேண்டுகோளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.
எனினும் ஹமாஸ் இயக்கம் தாக்குதல் தொடுத்துள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மீண்டும் ஆரம்பித்துள்ள உக்கிரமான மோதல்களினால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
20 நாட்களாக இடம்பெற்றுவரும் கடுமையான மோதல்களினால் காஸாவில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களுக்கும், உயிர் பலிகளுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வர பதற்றமும் நீடிக்கிறது.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

0 comments:
Post a Comment