இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இதுவரை 1000இற்கும் அதிகமானோர் காவுகொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் பொதுமக்கள் ஆவர்.
போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேலும், ஹமாசும் ஏற்றுக் கொண்டன. இதனையடுத்து நேற்று முதல் 12 மணி நேர போர் நிறுத்தம் அறவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தாக்குதல்களில் பலியானோரின் உடல்கள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா, காசா நகரம் ஆகியவற்றில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.
ஆக்ரோஷமான தாக்குதல்களினால் பலியானவர்களின் உடலங்கள் இன்னமும் மீட்கப்படாதுள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் ராணுவத்தினர் உட்பட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரீஸ் நகரில் நேற்று பிரான்ஸ் ஏற்பாட்டின் பேரில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பிய யூனியன், துருக்கி, கத்தார் நாடுகளின் அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசித்துள்ளனர்.

0 comments:
Post a Comment