கால்பந்துபோல் பெரிதாக தலை இருந்த குழந்தையொன்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனளித்துள்ளது. குழந்தை தற்போது சாதாரண நிலைக்குத் திரும்புவதாக பெற்றோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்திய தலைநகரான புது டெல்லியை சேர்ந்த ரூனா பேகம் (3) என்ற குழந்தை, 2013ம் ஆண்டில் மூளையில் தண்ணீருடன் பிறந்ததால் அவரின் தலை வழமையைவிட பெரிதாக இருந்தது.
மருத்துவர்கள் பலமுறை சிகிச்சையளித்தும் பலன் எதுவும் இல்லாததால் தாயும், குழந்தையும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தை நீண்ட நாட்கள் உயிர்வாழ மாட்டார் என பரவலாகக் கருதப்பட்டாலும், தற்போது அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
சிகிச்சைக்குப் பின்னர் இவரது தலை 37 அங்குலத்தில் இருந்து 23 அங்குலமாக குறைந்துள்ளது.
ரூனாவின் தந்தை அப்துல் இதுகுறித்து கூறுகையில், எனது மனைவி மிகவும் கவலைப்பட்டார், குழந்தையை ஆசிரமத்தில் சேர்த்துவிடுமாறும் சிலர் கூறினர். எனினும் தற்போது, குழந்தை மீண்டு வந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.




0 comments:
Post a Comment