''அம்மா'' செய்தியால் குழப்பம்!!
வார இதழ் ஒன்று நடிகர் விஜய்க்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி மதுரையில் ''அடுத்த சூப்பர் ஸ்டார்'' பட்டத்தை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் விஜய் தரப்பில் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிற்து. விஜய் ரசிகர்களும் இதற்காக குசியாக தயாராகி வருகின்றனர்.

நடிகர் விஜய்யும அவரது நண்பர்களை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலுவலகத்திற்கு இந்தச் செய்தி எட்டியுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ஜெ. ஓகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம். அதை இதுபோன்ற விழாக்களை நடத்தி உங்கள் தனிப்பட்ட செயல்களுக்காக தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று விஜய்க்கு செய்தி அனுப்பியுள்ளார்.
''அம்மா ஜெ'' இன் இந்த செய்தியால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய். தற்போது இந்தப் பட்டம் வழங்கும் விழா குறித்த திகதியில் நடைபெறுமா? என்றும் சிலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

0 comments:
Post a Comment