டொரண்டோவில் வாழும் ஸ்காட்லாந்து பெண் ஒருவரின் பெண்ணுறுப்புக்குள் கடந்த பத்து ஆண்டுகளாக செக்ஸ் பொம்மை ஒன்று இருந்ததை கண்டுபிடித்த டொரண்டோ மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பெண் ஒருவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று டொரண்டோ மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற வந்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக தனது உடல்நிலை மோசமாகி வருவதாகவும், உடல் இளைத்தும், களைப்பு மிகுதியாக இருப்பதாகவும், அவர் மருத்துவரிடம் கூறியுள்ளார்.
மருத்துவர் அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்த்து, எவ்வித கோளாறும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அவருடைய உடலை முழுமையாக ''சிடி ஸ்கேன்'' செய்துள்ளனர். இதன் பெறுபேறைப் பார்த்தபோது அவருடைய பெண்ணுறுப்புக்குள் ஏதோ ஒரு பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த பொருளை வெளியே எடுத்தபின்னர்தான் அது ஒரு செக்ஸ் பொம்மை என தெரியவந்தது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அந்த பெண் போதையில் செக்ஸ் பொம்மையை உபயோகித்ததாகவும், பின்னர் அந்த பொம்மையை வெளியே எடுக்க மறந்துவிட்டு தூங்கிவிட்டதாகவும், அதனால் அந்த பொம்மை கடந்த பத்து வருடங்களாக உள்ளேயே இருந்ததாகவும் பெண்ணிடம் விசாரித்தபோது தெரியவந்துள்ளது.
பெண்ணுறுப்பின் உள்ளே அந்த பொம்மை இருந்ததால், வெளியே வரவேண்டிய சிறுநீர் மீண்டும் உள்ளே சென்று கிருமிகளை உற்பத்தி செய்துள்ளது.
“vesicovaginal fistula” என்ற நோயினால் உடல் இளைத்தும், களைப்பாகவும் இதுவரை இருந்துள்ளார்.
தற்போது செக்ஸ் பொம்மையை அகற்றிவிட்டதால் அவர் இன்னும் சில நாட்களில் முழு ஆரோக்கியம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியே எடுக்கப்பட்ட குறித்த பாலியல் பொம்மை (sex toy) சுமார் ஐந்து அங்குலம் அளவுகொண்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பெயரை வெளியே சொல்ல மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்த செய்தி டொரண்டோவில் இருந்து வெளிவரும் Toronto Sun என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.



0 comments:
Post a Comment