சென்னை வட பழனியில் ஏ.வி.எம். ஸ்டூடியோ அமைந்துள்ள இடத்தை 400 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீராம் புரோபட்டிசிற்கு விற்பனை செய்வதற்காக ஏ.வி.மெய்யப்பனின் மகனான பாலசுப்பிரமணியத்துடன் இதுகுறித்து பேச்சுக்கள் நடந்துமுடிந்துள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவல் குறித்து கருத்து கூற ஸ்ரீராம் புரோபேட்டீஸ் மறுத்த நிலையில், பாலசுப்பிரமணியன் வெளியூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீராம் புரோபட்டீஸ் என்ற நிறுவனம் ஸ்டூடியோ அமைந்துள்ள பகுதியில் 7 லட்சம் சதுர அடி பரப்பில் அடுக்குமாடு குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் கூறுகின்றன.
ஏ.வி.எம். ஸ்டூடியோவின் 50% நிலத்தை ஸ்ரீராம் புரோபட்டீஸ் தனித்தும், எஞ்சிய 50% நிலத்தை மெய்யப்பனுடன் சேர்ந்தும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை வட பழனியிலுள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ. ஏ.வி.மெய்யப்பனால் 1945 இல் அமைக்கப்பட்டது.
165 க்கும் மேற்பட்ட பல மொழி திரைப்படங்களை திரையுலகத்திற்கு தந்தது ஏ.வி.எம். ஸ்டூடியோ. 6.5 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படும் ஸ்டூடியோவின் சந்தை மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதே இந்த இட பரிவர்த்தனைக்கு காரணம் என்கிறது வர்த்தக சந்தை நிலைவரம்.
இடம் கைமாறும் விவகாரத்தில் முதல்கட்டமாக ரூ.180 கோடி பரிவர்த்தனை நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட ஒப்பந்ததுக்கான கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment