தேசிய விருது வென்ற அனிகா என்ற குழந்தை நட்சத்திரம் தமிழ் திரைக்கு ‘தல 55′ படத்தில் அவரது குழந்தையாக அறிமுகமாகிறார்.
பல மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் அனிகா இந்த படத்தில் அஜித் – த்ரிஷாவின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அஜித்துடன் கௌதம் மேனன் முதன்முதலாக இணைந்திருக்கும் புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா - த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
மீண்டும் கௌதம் மேனனுடன் இணைய வாய்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் மலையாள நடிகை தேவி அஜித் நடிக்கிறார் என்பதுடன், அனிகா என்ற மலையாள குழந்தை நட்சத்திரமும் படத்தில் சேர்ந்துள்ளதால் தல 55 படத்தில் தற்பொழுது மலையாள வாசமும் வீசுகிறது.
மேலும் ‘தல 55′ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்திற்கு அதனையே தலைப்பை வைக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment