இரு குழந்தைகளுக்காக ஒரு தாயும், ஒரு பேயும் அடித்துக் கொள்ளும் பாசப் போராட்டத்தைக் கருவாக வைத்து ''மூச்'' என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.
பி புரொடக்ஷன்ஸ் சார்பாக பூபாலன் தயாரிப்பில் ‘மூச்’ என்ற திரைப்படத்தை வினுபாரதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிதின் கார்த்திக் இசையமைக்க வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினுபாரதி இயக்கும் இப்படத்தில் நாயகனாக நிதின் நடிக்கிறார். நாயகியாக நிஷா கோஷல் நடிக்கிறார். அபி-பியா என்ற இரு குழந்தைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மனோதத்துவ மருத்துவராக பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘கத்துக்குட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, இரு குழந்தைகளை மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும்-பேய்க்கும் இடையே திகிலோடு நிகழும் பாசப்போராட்டமே ‘மூச்’ என்றும் அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவையும் படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இரண்டு குழந்தைகள், தாய்க்கும்-பேய்க்கும் பாசப்போராட்டம் என்பவையெல்லாம் ‘மம்மா’ என்ற ஆங்கில படத்தை நினைவு படுத்துகிறதே?
அந்த ஆங்கிலப் பட ட்ரெய்லரையும் கொஞ்சம் பார்த்துட்டுப் போவோம்.
அந்த ஆங்கிலப் பட ட்ரெய்லரையும் கொஞ்சம் பார்த்துட்டுப் போவோம்.

0 comments:
Post a Comment