1880ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் வெப்பமான மாதமாக கடந்த ஜுன் மாதம் பதிவாகியதாக அமெரிக்க காலநிலை கண்காணிப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜுன் மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதுடன் 20ஆம் நூற்றாண்டில் சராசரியான வெப்பத்தைவிட அதிகமான வெப்ப நிலையைக் கொண்ட தொடர்சியான 352வது மாதமாக கடந்த ஜுன் மாதம் காணப்பட்டதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தென் அமெரிக்கா தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா கிறீன்லாந்து கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் ஜுன் மாதத்தில் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த நூற்றாண்டில் 15.5 பாகை செல்சியஸ் சராசரியான வெப்பநிலை காணப்பட்டது. எனினும் கடந்த ஜுன் மாதம் 16.2 பாகை செல்சியசாக வெப்பநிலை காணப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் சராசரி வெப்பநிலை மேலும் 4 வீதம் அதிகரிக்கலாம் என்றும் இதனைத் தடுக்காவிட்டால் நீர் ஏரிகளில் வரட்சி ஏற்பட்டுவிடும் என்றும் காலநிலை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments:
Post a Comment