“பொய் சொல்லப்போறோம்”, “ஏகன்”, “கோவா”, “கோ” படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட்டுக்கு திரும்பச் சென்று சிறு படங்களில் நடித்துவந்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.
சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார் பியா. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் “நெருங்கி வா முத்தமிடாதே” படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தில் ஷபீர், பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். தேசியபெட்ரோல் தட்டுப்பாடு என்பது மையக் கரு. இதில் நான்கு பேரின் வாழ்க்கை கதைகள் வெவ்வேறு கோணத்தில் சென்று இணையும்.
நெடுஞ்சாலைகளில் படபிடிப்பு நடந்துள்ளது. நானும் நடித்துள்ளேன். செப்டம்பரில் படம் வெளியாகிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment