இந்த படத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெறாமல் போன ‘புத்தம் புது காலை’ பாடல் இப்படத்திற்காக டிஜிட்டலில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. மேலும் 12 நாட்கள் தொடர்ந்து பின்னணி இசை அமைத்து பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார் இசைஞானி.
‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்திருந்த அஸ்வின் இந்த படத்தில் தடயவியல் நிபுணராக நடிக்கிறார்.
இதில் கதாநாயகியகளாக சிருஷ்டி மற்றும் அங்கனாராய் நடித்துள்ளனர். வை.ஜி.மகேந்திரன், ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், ரவி பிரகாஷ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் இவருடைய ஒளிப்பதிவு பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இயக்குநர் சுப்ரமணியசிவாவிடம் பணிபுரிந்த கார்த்திக் ரிஷி, கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.
வருகிற ஒகஸ்ட் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தை ஜி.பி.ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். ஜே.எஸ்.கே.பிலிம் கோர்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் இப்படத்தை வெளியிடுகிறார்.

0 comments:
Post a Comment