நடிகர் கமல்ஹாசன் நடிகை அபிராமி நடிப்பில் தமிழில் வெளிவந்த படம் ‘விருமாண்டி’ அந்த திரைப்படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு ‘சண்டியர்’ ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘விருமாண்டி’ என்று வைக்கப்பட்டது.
தற்பொழுது இயக்குநர் சோழதேவன் இயக்கத்தில் எம்.கே.எஸ் பிலிம்ஸ் வழங்கும் உயிர்மெய் புரொடக்ஷன்ஸ் எஸ்.சங்கர்பிரசாத், கே.எஸ்.செந்தில்குமாருடன் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு ‘சண்டியர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக புதுமுகங்கள் ஜெகன் மற்றும் கயல் அறிமுகமாகிறார்கள். மேலும் நாயகம் டி.ரவி, சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹரிபாஸ்கர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யத்தீஷ் மகாதேவ் இசையமைக்கிறார்.
இயக்குனர் ரமணா, விஜி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ‘சண்டியர்’ படத்தின் இயக்குநர் சோழதேவன் இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியும் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment