ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் விநோத வழக்கு!

ஐந்து பைசாவிற்கான விவாகரம் குறித்த ஒரு வழக்கு கடந்த 41 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக ரன்வீர் சிங்  1973ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியாற்றிய மாயாபுரிக்கான பேருந்தில் போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் ஏறியுள்ளனர்.

அப்போது நடத்துநர் ஒரு பெண் பயணியிடம் 15 பைசாவிர்கு பதிலாக 10 பைசா டிக்கெட் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரன்வீர் சிங் போக்குவரத்துக் கழகத்துக்கு ஐந்து பைசா இழப்பை ஏற்படுத்தியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர் இதுபோன்ற இழப்பை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, 1976ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.  இதனை எதிர்த்து பணியாளர் நல நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பணியாளர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், நடந்த தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை பொருத்தமற்றதாக உள்ளது என்று தெரிவித்ததோடு, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அவருக்கு சேரவேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் 1990ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பினை ஏற்காத போக்குவரத்துக் கழகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததோடு, அரசுக்கு வர வேண்டிய வருவாயை மோசடி செய்த ஊழியர் மீது கருணை காட்ட முடியாது என்று முறையிட்டுள்ளது.

இந்த முறையீட்டை டெல்லி உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகளாக விசாரித்து வந்தபின்னர், 2008 ஆம் ஆண்டு பணியாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டபோது, ரன்வீர் சிங் பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டார்.

இதனையடுத்து, தனக்குச் சேர வேண்டிய ஓய்வுகால சலுகைகள், சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டு அவர் மனு தாக்கல் செய்ததை ஏற்காத போக்குவரத்துக் கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், போக்குவரத்துக் கழகத்தை ஏமாற்றிய ஒரு ஊழியரை எந்த தண்டனையும் இன்றி தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது. அவருக்கு பின் திகதியிட்டு சம்பளம் வழங்க முடியாது, ஓய்வுகால சலுகைகளும் வழங்க முடியாது.

ரன்வீர் சிங்கின் பணிக்கால ஆவணத்தில் அவர் பல முறை இதுபோன்று தவறு செய்துள்ளது பதிவாகியுள்ளது. பயணிகளை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை பணியில் இருந்து விடுவித்தது செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு 1,000 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் ஐந்து பைசாவிற்காக ஆரம்பித்த இந்த வழக்கும் இன்னும் இழுத்துக்கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment