''தல'' இன் தல கறுப்பாகிறது!


மங்காத்தா, வீரம் படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் நடித்த அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவரும் படத்திலும் ஒரு வேடத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் நடித்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் என்பதால் சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் கூடிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது அஜித்-த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அஜித்தை இளமை ததும்பும் வேடத்தில் நடிக்க வைக்க இயக்குநர் விரும்பியுள்ளார்.

இதனை அஜித்திடம் கூற, அவரும் சம்மதம் சொல்லிவிட்டதோடு தனது நரைத்த முடிக்கு கறுப்பு டை அடுத்து கருகரு முடியுடன் இளமைத் தோற்றத்திற்கு மாறிவருகிறாராம்!

கடந்த சில வருடங்களாக அஜித்தை சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் பார்த்துவந்த ரசிகர்கள் இந்தப் படத்தில் அவரை மீண்டும் இளமை ததும்பும் கெட்டப்பில் பார்க்கபோகிறார்கள்.

நரைத்த முடியுடன் அஜித் ஏற்படுத்திய ட்ரென்ட்டை அடுத்து, தலைமுடி நரைப்பவர்கள் கூட சாயம் பூசுவதை நிறுத்திவிட்டு ''தல ஸ்டைல்'' எனக் கூறியலைய ஆரம்பித்துவிட்டனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment