உருகும் பனிமலைகளால் பூமிக்கும் பேராபத்து!

அண்டார்டிகாவில் உள்ள பனிப்படலம் பெரும் அளவில் குறைந்துள்ளதால், புவி ஈர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்களை வைத்து ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு செலுத்திய செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்களை அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின் இறுதியில் புவி ஈர்ப்பு சக்தியில் மாற்றம் குறித்து தெரிய வந்துள்ளது.

பூமியின் சுழற்சி, மலைத் தொடர்கள், ஆழ்கடலில் உள்ள பெரும் பள்ளங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், புவி ஈர்ப்பின் தன்மை வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது.

அதே போல, வட துருவ, தென் துருவ பனிப் பிரதேசங்களும் புவி ஈர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அண்டார்டிகா பகுதியின் புவி ஈர்ப்புத் தன்மை குறித்து, 2009-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் 2012-ஆம் ஆண்டு ஜூன் வரை செயற்கைக்கோள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அண்டார்டிகா பகுதியில் பனிப்படலம் பெரும் அளவு குறைந்தது தெரிய வந்திருக்கிறது.

இது புவி ஈர்ப்பு சக்தியில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் பனிப்படம் குறைந்து வருவது இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2011-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை 125 கன கிலோமீட்டர் அளவிலான பனிப்படலம் குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment