தமிழ் சினிமா கைகொடுக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் சார்மி. டோலிவுட்டில் இவர் நடித்த அத்தனை படங்களும் மாபெரும் வெற்றியடைய அங்கு இவருக்கு செம்ம மார்க்கெட்.அதிலும் இவரின் குத்தாட்டத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்-சமந்தா நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடவுள்ளார்.இது குறித்து கூறிய விஜய் மில்டன் ’சார்மி சிறப்பாக நடனமாடக்கூடியவர்.
சாதாரண நடன அசைவுகளாக இருந்தாலும் அவர் அதை தனது உடல்மொழியால் வெளிப்படுத்தும் விதம் அசத்தலாக இருக்கும். அப்படியே அந்த பாடல் முழுக்க ரசிகர்கள் அக்கம் பக்கம் திரும்ப விடாமல் கட்டிப்போட்டு விடும் ஆற்றல் மிக்கவர்.’ என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment